டெல்லி: 

ங்கையை சுத்தம் செய்ய 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியும் இதுவரை எந்தப்பணியும் நடக்கவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய பசுமைத்தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஸ்வாடன்டர் குமார் தலைமையில் நடந்த விசாரணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு கொடுத்திருக்கும் பணியை தேசிய பணியாக நினைத்து செய்து முடிக்க வேண்டும் என்றார். மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அரசின் முகமைகளும் தங்களது பணிகளை சரிவர செய்ய மறுக்கின்றன என்று கூறிய தீர்ப்பாயம், அதிகாரிகள் தங்கள்  பணிகளை சரியாக செய்தால் நீதிமன்றத்தில் நிற்க தேவையில்லை என்று குறிப்பிட்டது.

கங்கையை சுத்தம் செய்வதாக கூறி மக்கள் பணத்தை வீணடிப்பதாகவும் தீர்ப்பாயம் கண்டித்துள்ளது. ஒரு துளி கங்கை நீரைகூட இதுவரை சுத்தம் செய்யப்படவில்லை என்றும் தீர்ப்பாயம் வருத்தம் தெரிவித்துள்ளது.