புதுடெல்லி:
யார் பிரதமர் என்பதை மே 23-ம் தேதிக்குப் பிறகு ஆலோசித்தால் போதும் என முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், உத்திரப்பிரதேச மாநிலம் மணிப்பூரி டவுன் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரதத்தில் கட்சியின் தலைவரும் மகனுமான அகிலேஷ் யாதவுடன் சென்று முலாயம் சிங் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். மணிப்பூரி தொகுதியில் முலாயம்சிங் யாதவ் 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. யார் பிரதமர் என்பதை மே 23-ம் தேதிக்குப் பிறகு ஆலோசிக்கலாம் என்றார்.