சென்னை:

மிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தற்போதுவரை, வழக்கமான அளவைவிட சுமார் 9 சதவிகிதம் குறைவாக பெய்துள்ள சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த, , வாலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மழைப்பொழிவு, வழக்கத்தை விட, 9 விழுக்காடு குறைந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், அடுத்த 2 நாட்களுக்கு தமிகத்தில் , லேசானது முதல் மிதமான மழைக்கும், 7 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

இந்த மாதம் 1ந்தேதி முதல்  இன்று வரை பதிவான மழைப்பொழிவு குறித்த தகவல்களை வெளியிட்டார்.  அதன்படி, வழக்கமாக பெய்யும் மழையையை விட 9 சதவிகிதம் குறைவாக இருப்பதாகவும்,  வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், அடுத்த 2 நாட்களுக்கு, ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமானது வரையில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 சென்டி மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் 7 சென்டிமீட்டரும் மழைப்பதிவாகியுள்ளது.  மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.