எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை; வட கொரியா அதிபர் தகவல்

Must read

பியோங்யாங்:
ங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

வட கொரியாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஜூன் 4-10 தேதிகளில் 733 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டதாக WHO செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது. அவர்களில் 149 பேருக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் அல்லது கடுமையான சுவாச நோய்த்தொற்று இருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அங்கே கடுமையான பஞ்சம் நிலவுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தொற்று பாதிப்பு இல்லவே இல்லை என கூறுகிறார். ஜூன் 10 ஆம் தேதி வரை 30,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனத்திடம் வட கொரியா தெரிவித்துள்ளது.

More articles

Latest article