திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளம்பர பதாதகை (பேனர்)யில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒளிப் படம் இடம்பெற்றுள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபராக உள்ள கிம் ஜோங்உன், பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார். பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை யை அவ்வவப்போது நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம், அவரது அதிரடி நடவடிக்கைகள் பற்றி பல்வேறுவிதமான செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியில் சி.பி.எம். கட்சியினர், தங்களுடைய கட்சி பேனரில் கிம் ஜோங் உன் படத்தை இடம் பெறச் செய்திருக்கின்றனர்.
சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பாறைசாலையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் இயேசு கிறிஸ்து குறித்த படம் இடம் பெற்றது விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.