உர ஆலையைத் திறந்தது வடகொரிய அதிபரின் ‘டூப்ளிகேட்’?
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் –குறித்த வதந்திகள் இன்னும் ஓயவில்லை.
கடந்த மாதம் 20 நாட்களாக மக்கள் கண்ணில் படாமல் மறைந்திருந்தார், கிம்.
இதையடுத்து அவர் குறித்த ஹேஷ்ய செய்திகள் இறக்கை கட்டி பறந்தன.
‘’மாரடைப்பு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது, அவர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது’’ என்று முதலில் செய்தி பரவியது.
இந்த நிலையில், ஊர் வாயை அடைக்கும் வகையில் கிம் ஜோங் உன், கடந்த 2 ஆம் தேதி உரத்தொழிற்சாலை திறப்புவிழாவில் கலந்து கொண்டார்.
ஆனால் விழாவில் கலந்து கொண்டது கிம் அல்ல- அவரது ’டூப்’ எனச் செய்தி பரவியுள்ளது.
’’ஆலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிம்மின் பற்கள், காது. தலை முடி ஆகியவை உண்மையான கிம்முடன் ஒத்துப்போகவில்லை’’ என்று வெளிநாட்டுச் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
ரஷிய அதிபர் ஸ்டாலின், ஈராக் அதிபர் சதாம் உசேன்,ஹிட்லர் ஆகியோர் உயிருடன் இருந்தபோது, அவர்களைப் போலவே தோற்றமளிக்கும் ‘டூப்’கள் – சில சமயங்களில் பொது வெளியில் காட்சி அளித்ததாகக் கூறப்படுவது உண்டு.
அதுபோல், கிம் ஜோங் உன்னும், தன்னை போன்றே உருவ ஒற்றுமையுள்ள ’டூப்’பை உர ஆலை திறப்பு விழாவில் பங்கேற்கச்செய்துள்ளார், என்பது வலைத்தளங்களின் வாதம்.
– ஏழுமலை வெங்கடேசன்