சியோல்,
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி மீண்டும் 4 புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது வடகொரியா.
வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மற்றும் அணு ஆயுத சோத னைகள் நடத்திவருகிறது இதன் காரணமாக, வடகொரியாமீது ஐ.நா. பொருளா தார தடை விதித்துள்ளது.
இந்நிலையில்,
வட கொரியா மீது ஐ.நா. மற்றும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. அமெரிக்க புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு கடந்த மாதம் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியது. தற்போது மீண்டும் 4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் செலுத்தி சோதனை நடத்தியது.
இந்த சோதனை ஜப்பான், தென் கொரியா கடல் பகுதியில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஏவுகணைகள் 1000 கி.மீட்டர் (620 மைல்) தூரம் பறந்து சென்று தாக்கும் திறன் படைத்தவை. சோதனை நடத்தப்பட்ட 4 ஏவுகணைகளில், 3 ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதி அருகே வந்து விழுந்தன.
வடகொரியாவின் அதிரடி சோதனை காரணமாக தென்கொரியாவிலும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது.
வட கொரியா இன்று நடத்திய ஏவுகணை சோதனையில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்க கூடிய திறன் படைத்தது என்றும், அது அமெரிக்காவின் அலாஸ்கா, வாஷிங்டன், மாகாண பகுதியை பறந்து சென்று தாக்கும் திறன் படைத்ததும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து போர் பயிற்சி ஒத்திகை நடத்தியது. மேலும் தென்கொரியாவுக்கு ஆதரவாக ஏவுகணையை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட தடுப்பு கருவியை அங்கு நிறுவியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சீனாவுடனான வடக்கு எல்லையில் உள்ள தளத்திலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டன என்றும் அவை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்தன என்றும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த மிரட்டல் சோதனைக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது,
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகனை சோதனை வட கொரியா புதிய அச்சுறுத்தலுக்கு சான்றாக உள்ளது என கூறினார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் கூறும்போது,
அமெரிக்க – தென்கொரியா பாதுகாப்பு உறுதியாக உள்ளதாக கூறி உள்ளார்.
அமெரிக்க மாறும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல்கள் நடத்த முயன்றால், அது தோல்வியிலேயே முடியும், அணு ஆயுதங்கள் பயன்படுத்தினால், அதற்கான பின் விளைவுகளை வடகொரியா சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
வடகொரியாவின் சோதனைக்க, கொரிய தீப கற்பகத்தில் உள்ள தென் கொரியா, ஜப்பான், வியட்நாம், சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.