டோக்கியோ:
.நா. சபை விதித்திருக்கும் தடையையும் மீறி  வடகொரியா அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஏவி பரிசோதனைசெய்ததால், அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது..

கொரியா இருப்பிடம்
கொரியா இருப்பிடம்

ஆசிய கண்டத்தின் கிழக்கு பகுதியில்  உள்ள முக்கிய நாடான வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஆனாலும், உலக நாடுகள் எச்சரிக்கை மற்றும்  ஒப்பந்தங்களை மீறி அணு ஆயுதச்சோதனை, சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனைகளை  தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதனால், ஐ.நா. மற்றும் அமெரிக்கா வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனாலும் வடகொடரியா தனது  ஏவுகணை சோதனைகளை நிறுத்தவில்லை.
கடந்த மாதம் 24-ந்தேதி கடலில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, 500 கி.மீ. தூரம் வரை பாயும் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்தது.
ஏவுகணை ( கோப்பு படம்)
ஏவுகணை ( கோப்பு படம்)

இந்த நிலையில் மீண்டும் மூன்று ஏவுகணைகளை வீசி பரிசோதனை செய்தது. இந்த பரிசோதனை,  அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாங்ஜூ மாநிலத்தில் நடந்தது. இங்கிருந்து ஜப்பானின் கிழக்குக் கடற்கரையை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன. இவை கண்டம் வி்ட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என்று தெரியவருகிறது.
சீனாவில் ஜி20 உச்சிமாநாடு நடக்கும் நேரத்தில் வடகொரியாவின் இந்த நடவடிக்கை, உலக நாடுகளை எரிச்சலடைய வைத்திருக்கிறது.   குறிப்பாக இம்மாநாட்டில் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹீ மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசிய வேளையில் , வடகொரியா இச் சோதனையை நடத்தியது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
.