
மும்பை
தென் இந்தியாவில் அதிக வாய்ப்பு உள்ளதால் பல வட இந்தியர்கள் இங்கு இடம் மாறுவதாக மும்பையை சேர்ந்த வேலை தேடித் தரும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது தென் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை,பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் வட இந்தியர்கள் வெகுவாக காணப்படுகின்றனர். பெரிய தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி, தெருவோரக் கடைகள் மற்றும் சிற்றுண்டி சாலைகளிலும் வட இந்தியப் பணியாளர்கள் அதிகம் நிறைந்துள்ளனர். இது குறித்து மும்பையை சேர்ந்த வேலை தேடித் தரும் நிறுவனம் ஒன்று ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “எங்கள் நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு ஆள் தேடித் தருகிறோம். இந்த வேலை வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது தென் இந்தியாவில் தான். நாடெங்கும் உள்ள வேலை வாய்ப்புக்களில் தென் இந்தியாவில் 40%, மேற்கு இந்தியாவில் 25% வடக்கிலும், 28% மேற்கிலும் 7% கிழக்கிலும் உள்ளன. மீதமுள்ளவை மத்திய இந்தியாவில் உள்ளன.
ஆனால் திறமையுள்ளவர்கள் நாடெங்கும் பரவலாக உள்ளனர். அதனால் தற்போது நாட்டில் எந்தப் பகுதியில் வசித்தாலும் தெற்கில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதால் இங்கு அதிகம் பேர் இடம் மாறுகின்றனர். மேலும் தற்போது வேலை வாய்ப்பு அளிப்பவர்களும் திறமை உள்ளவர்களா என்பதை மட்டுமே கவனிக்கின்றனர். அதனால் தென் இந்தியாவில் அதிக அளவில் வட இந்தியர்கள் பணி புரிகின்றனர்.
ஒர் நிறுவனம் நல்ல வசதிகளையும் முன்னேறும் வாய்ப்புக்களையும் அளிக்கிறது என்றால் இடம் மாற யாரும் தயங்குவதில்லை. மொழி பிரச்னையைப் பற்றி அவர்கள் அதிகம் கண்டுக் கொள்வதில்லை. தெற்கில் உள்ள மிகப்பெரிய ஐ டி நிறுவனங்கள் சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன. எனவே இந்த மூன்று நகரங்க்ளில் இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் இடம் பெயருகின்றனர்.” என தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]