சென்னை:

கில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், முன்னாள் வடசென்னை மாவட்டச் செயலாளரு மான ராயபுரம் மனோ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று கட்சி தலைமைக்கும், கட்சியினருக்கும் கனத்த இயத்தோடு தெரிவிக்கிறேன்.

மாவட்டத் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிர1 உறுப்பினர் என்ற முறையில், பலநூறு இயக்க நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கின்றேன். கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தி அவர்கள் பெருமைகளை, சாதனைக ளை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லி, இந்த இயக்கம் வலுமான இயக்கமாக உருப்பெற்று தமிழகத்தை ஒருநாள் ஆள வேண்டும் என்று என்னை முழுமையாக அர்ப்பணித்தேன்.

தொடர்ந்து 30 ஆண்டுகளாக நேரு குடும்பத்துக்கு விசுவாசமாக, உணா்வுபூா்வமாக மனநிறைவுடன் பணியாற்றினேன். எனக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படும் காரணத்தால் காங்கிரஸிலிருந்து விலகி பாா்வையாளராக (பொதுமக்கள்)  செயல்பட ஆசைப்படுகிறேன். காங்கிரஸில் மனநிறைவோடு பணியாற்றினேன். மனநிறைவோடு விடைபெறுகிறேன்.

இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு தநத அனைத்து தலைவர்களுக்கும், என்னோடு உறுதுணை யாக இருந்த நண்பர்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன், ஆனால் என் மக்கள் நலப்பணி தொடரும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள  கோஷ்டி பூசல்களால் பலர் கட்சியைவிட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த மனோ,  தமிழக காங்கிரஸ் தலைவராக சு.திருநாவுக்கரசா் இருந்தபோது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆனால், பின்னர், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரானர் பதவி வழங்கி தேசிய நீரோட்டத்தில் அவரை இணைத்தனர்.  இதனால் மாவட்ட கட்சிப் பணிகளில் இருந்து புறக்கணிக்கப்ப்டட நிலையில், கடந்த சில மாதங்களாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

ராயபுரம் மனோ விரைவில் திமுகவில் இணைவாா் என எதிர்பார்க்கப்படுகிறது.