டெல்லி: OTT இயங்குதளங்களுக்கான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், பெரும்பாலான சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் ஓடிடி எனப்படும் இணையதள இயங்கு தளங்களை நாடி வருகின்றன. அதன்படி, அமேஷான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்பட பல தளங்கள், பயனர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. சமீபகாலமாக இதுபோன்றை ஓடிடி இணையதளங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.  அதனால் புதிய படங்களையே கூட, தியேட்டருக்கு பதிலாக ஓடிடி இணையதளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

இதில் வெளியாகும் காட்சிகள் மற்றும்  தகவல்கள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதால்,அதை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களவையில் ஜீரோ அவரில், பாஜக உறுப்பினர் மகேஷ் போத்தர்,  கேள்வி எழுப்பினார். அப்போது, OTT தளங்களில் சில உள்ளடக்கம் மற்றும் மொழி மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது மற்றும் பாலியல் பாகுபாடு காட்டுவதாக கூறினார். “பெண்களுக்கு எதிரான கச்சா மொழி காட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் தாமதமின்றி அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும், ”என்றார்.

அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்., நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற மேலதிக (OTT) தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்தியஅரசு விரைவில் வெளியிடும், ஓடிடி தளங்கள் குறித்து  நிறைய பரிந்துரைகளையும் புகார்களையும் பெறுகிறோம். அதற்காக வழிகாட்டுதல்களும் திசைகளும் கிட்டத்தட்ட தயாராக உள்ளன. அவை விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.