டில்லி:
மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.6 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மானிய விலை சிலிண்டர் விலையும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் மாற்றி அமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்தியஅரசு அனுமதித்துள்ளதுபோல, சமையல் எரிவாயு விலையும் அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மேல் வாங்குபவர்களுக்கு மானியம் அல்லாத விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இதன் விலை மே 1ந்தேதி முதல் சிலிண்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதன் விலை சிலிண்டருக்கு ரூ.722–ல் இருந்து ரூ.728 ஆக உயர்ந்துள்ளது.
அதுபோல, மானியத்துடன் கூடிய கியாஸ் சிலிண்டர் விலை 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதன் விலை ரூ.484.02 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலும் கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது
ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணையின் விலை, லிட்டருக்கு 25 காசு அதிகரித்துள்ளது.