கொரோனா தென்கொரியாவிலும் பல்வேறு தாக்கத்தினை ஏற்படுத்தியது நீங்கள் அறிந்திருக்கலாம். அந்நேரத்தில் கொரியாவில் வித்தியாசமான பரப்புரை ஒன்று டுவிட்டர் வழியாக பரப்பப்பட்டது.
சாதாரணமாக மனிதர்களுக்கு வேலை செய்யும்போது இயல்பாக எந்த கையை பயன்படுத்துகிறோமோ அந்த கையே அவருக்கு பழக்கமானது. அதாவது எழுதும்போது ஒருவர் இடதுகையில் எழுதினால் இடது கை பழக்கம் உடையவர், வலது கை வழியாக எழுதனால் வலது கை பழக்கம் உடையவர்கள் என்பது வழக்கம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க கதவினை திறப்பது, காலிங் பெல் அடிப்பது போன்றவற்றை வழக்கமான நம் நாம் வழக்கமாக பயன்படுத்தும் கைக்கு பதிலாக இன்னொரு கை வழியே அந்தச் செயலை செய்யலாம்.
ஏனெனில் நாம் முகத்தை தொடும்போது தன்னிசையாக நம் வழக்கமான கையே முகத்தையே தொடும். எனவே கதவை திறப்பது, பொருட்களை எடுப்பதுப்போன்ற பணிகளை நாம் நமது இன்னொரு கை மூலம் பயன்படுத்தினால் நமது முகத்தினை நாம் வழக்கமான பயன்படுத்தும் கையின் மூலம் தொடலாம். இதன் மூலம் கிருமித்தொற்று நமது முகத்திற்கு வராது என்று டுவிட்டர் மூலமாக கொரியாவில் பரப்புரை செய்யப்பட்டது

ஆனால் தன்னிச்சையாக செயல்படும் இவ்விசயத்தை உடனடியாக மாற்றிட இயலாது என்றும் சிலர் தெரிவித்துவருகின்றனர். ஆனாலும் நம் மனதினை இதில் முழுமையாக ஈடுபடுத்தி மாற்றங்களை முயற்சித்துப்பார்க்கலாம்

செல்வமுரளி