திருவனந்தபுரம்: சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாத அனைத்து தரப்பினரும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசித்தி பெற்றது. திருப்பதிக்கு லட்டுபோல, சபரிமலை அய்யப்பன் கோவிலில் அரவணை பாயாசம் உள்பட பல பிரசாதங்கள் இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சபரிமலை கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான உள்நாடு, வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பிரசாதம் வாங்கிச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சபரிமலையில், பிரசாதம் தயாரிப்பதற்கு பிராமணர்கள் மட்டுமே அனுமதிக்க படுவதாக அண்மையில் கேரளாவில் விளம்பரம் ஒன்று வெளியிடப் பட்டு இருந்தது. இத்தகைய திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அம்பேத்கர் கலாச்சாரப் பேரவை தலைவர் சிவன் என்பவர் மனித உரிமை ஆணையத்திற்கு புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் தயாரிப்பதற்கான டெண்டரில் இருந்த ஜாதி நிபந்தனைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வாபஸ் பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, பிரமாணர் அல்லாதவர்களும் பிரசாதம் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.