ஸ்டாக்ஹோம்:
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப் டிலனை காணவில்ல என்று நோபல் பரிசு கமிட்டி அறிவித்து உள்ளது.
2016ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப் டிலனுக்கு (வயது 75) வழங்கப்பட்டது.
இதுதொடர்பான அறிவிப்பை நோபல் குழு கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.
புகழ்பெற்ற அமெரிக்க ராக் மற்றும் நாட்டுப்புற இசைப் பாடகரான, பாப் டிலன், இசையுலகில் பெரும் ஆளுமை யாக விளங்குகிறார். அவரது ` தெ டைம்ஸ் , தே ஆர் எ சேஞ்சிங், ப்லோயிங் இன் தெ விண்ட், லைக் எ ரோலிங் ஸ்டோன் போன்ற பாடல்கள் 1960களின் மிகவும் பிரபலமாக விளங்கியது.
ஆனால் உலகின் பெருமை மிகு விருதான நோபல் பரிசு பெறுவது குறித்து பாப் டிலன் என்ன நினைக்கிறார் என்பது பற்றி அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரமும் தெரியவில்லை என்று நோபல் பரிசு கமிட்டி அறிவித்து உள்ளது.
எனவே, அவரை தொடர்பு கொள்ள நோபல் கமிட்டி மேலும் முயற்சி எடுக்காது என்று கமிட்டியின் செயலாளர் சாரா டேனியஸ் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், வரும் டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவிற்கான அழைப்பை ஏற்று பாப் டிலன் வந்த பரிசை பெறுவார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற இசை கலைஞர் பாப் டிலனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.