பிரேசில்
பிரேசில் நாட்டுக்கு வர இந்தியா மற்றும் சீன நாட்டினர்களுக்கு விசா தேவை இல்லை என அந்நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ அறிவித்துள்ளார்.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் பிரேசில் ஒன்றாகும். இந்த வருட தொடக்கத்தில் இந்நாட்டின் அதிபராக ஜெயிர் பொல்சனாரோ பதவி ஏற்றார். அவர் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தற்போது வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளன. எனவே இந்நாட்டில் இருந்து வரும் வர்த்தகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலருக்கு விசா தேவை இல்லை என அதிபர் அறிவித்துள்ளார்.
மேலும் பல நாடுகளுக்கு விரைவில் இந்த வசதி விரிவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத் தொடக்கத்தில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு விசா தேவை இல்லை என அதிபர் அறிவித்திருந்தார். ஆனால் இந்த நாடுகள் பிரேசிலில் இருந்து அங்கு செல்வோருக்கு அந்த வசதியை அளிக்கவில்லை.