சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கியப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் உயர்கல்வி முடங்கியுள்ளது என ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாகவே உள்ளது. இங்கு சிறந்த கல்வியாளர்களை உடனடியாக துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்.
தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் பதவியும் 20 நாட்களுக்கும் மேலாக காலியாக இருக்கிறது அதையும் உடனே நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.