2017-18ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வித த்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. செல்போன், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட வசதிகளைப் பெறாதவர்களும், எளிதாகப் பணம் அனுப்பவும் பெறவும் ஏதுவாக, ஆதார் அட்டை மூலம் பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2. கருப்புப் பண ஒழிப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரைப்படி இனி, 3 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாகப் பரிவர்த்தனை செய்ய முடியாது.
3. ‘பீம்” செயலியை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக, மேலும் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
4. அரசே இயக்கி வரும் யு.பி.ஐ. யு.எஸ்.எஸ்.டி. ஆதார் பே, ஐ.எம்.பி.எஸ் மற்றும் டெபிட் அட்டைகள் மூலம், இந்த நிதியாண்டில், 2,500 கோடி எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. பாயின்ட் ஆப் சேல் மூலம் நடக்கும் பரிவர்த்தனையில் அனைத்து வரிகளும் நீக்கப்படுகின்றன
6. 2017, மார்ச் மாத த்திற்குள், வங்கிகளில் 10 லட்சம் ஸ்வைப்பிங் இயந்திரங்களும், செப்டம்பருக்குள் 20 லட்சம் இயந்திரங்களும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது
7. அரசியல் கட்சிகள் இனி டிஜிட்டலாகவோ அல்லது செக்காகவோ தான் நன்கொடையைப் பெற வேண்டும்
8. ஆன்லைனில் ரயில் டிக்கெட் பதிவு செய்தால், சேவை வரி ரத்து செய்யப்படும்