சென்னை:  இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை, இலவசமாகவே பயணம் செய்து கொள்ள முடியும். ஆனால் வரும் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து இந்த விதிமுறை மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு தற்போது  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்  அளித்துள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும் என்றவர்,  இருசக்கர வாகனங்களுக்கு அரசு சுங்க வரி விதிக்கப் போவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என தனது எக்ஸ் தளத்தில் தெளிவுபடுத்தி உள்ளார்.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி  தனது  எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்க இருப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அத்தகைய முடிவு எதுவும் முன்மொழியப்படவில்லை. இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும். உண்மை தெரியாமல் தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடக அறம் அல்ல. இதை நான் கண்டிக்கிறேன்

இவ்வாறுபதிவிட்டுள்ளார்.

இதேபோல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கவரி விதிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

 நாடு முழுவதும் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இலவசமாக சென்று கொள்ளலாம் அவர்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவது கிடையாது. ஆனால் வரும் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து இது மாற்றப்படுவதாக தகவல்கள் பரவின. ஆனால் இது உண்மை இல்லை என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் தந்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இரு சக்கர வாகனங்களும் இனி சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவை உண்மை இல்லை என கூறியுள்ளது. அரசுக்கு தற்போது அது போன்ற எந்த ஒரு பரிந்துரையும் இல்லை இரு சக்கர வாகனங்கள் வழக்கம் போல இலவசமாகவே சுங்கச்சாவடிகளை கடக்கலாம் என தெரிவித்துள்ளது.

அரசின் அறிவிப்பால் சாமானிய மக்கள் நிமம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஏற்கனவே நான்கு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி ஆண்டு தோறும் கடுமையாக உயர்த்தப்பட்டு வரும் நிலையில், இருசக்கர வாகனங்களும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை வந்தால் லட்சக்கணக்கான  சாமானிய மக்கள்  இம் பாதிக்கப்படுவார்கள். சுங்க கட்டணத்திற்காக இனி மாதம்தோறும் தங்கள் பட்ஜெட்டில் கூடுதல் தொகையை ஒதுக்க வேண்டி இருக்கும். ஆனால் சாமானிய மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இந்த விளக்கம் அமைந்துள்ளது.

அண்மையில் தான் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஆண்டுக்கான டோல் பாஸ் திட்டத்தை கொண்டு வந்தது . இதன் மூலம் தனியார் கார் உரிமையாளர்கள் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஆண்டுக்கான டோல் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் . இந்த பாஸை கொண்டு ஓராண்டு முழுவதும் கூடுதலாக எந்த கட்டணமும் செலுத்தாமல் சுங்க சாவடிகளை கடந்து கொள்ளலாம்.