டில்லி

ன்னும் 2 ஆண்டுகளில் சுங்கச்சாவடி இல்லாமல் ஜி பி எஸ் மூலம் வாகனக் கட்டணம் செலுத்தும் முறை நாடெங்கும் அமலாகும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தனியாரிடம் சாலைகள் ஒப்படைக்கப்பட்டு அந்த பராமரிப்புக்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு உரிமை அளித்துள்ளது.   இவ்வாறு ஆங்காங்கே சுங்க சாவடிகள் உள்ளதால் வாகனங்கள் அங்கு நின்று கட்டணம் செலுத்தி விட்டுச் செல்கின்றன.  இதனால் கால தாமதம் ஆவதாகப் பல ஓட்டுநர்கள் குறை கூறி வந்தனர்.

இன்று இந்திய வர்த்தக மற்றும்  தொழில்துறை கூட்டமைப்பின் நிகழ்வு ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின்  கட்கரி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அவர் தனது உரையில், “தற்போது வாகனங்கள் சுங்க சாவடிகளில் நின்று செல்வதாக் கால தாமதம் ஏற்பட்டு போக்குவரத்து தடைப் படுகிறது.  எனவே நாடெங்கும் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய சுங்கச்சாவடிகள் உள்ள இடங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

எனவே இந்த இடத்தை தாண்டுவதை ஜிபிஎஸ் மூலம் வாகன ஓட்டிகளின் வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் பிடிக்கப்படும்.  இதையொட்டி அனைத்து வணிக ரீதியான வாகனங்களிலும் கண்காணிப்பு தொழில்நுட்பம் பொருத்தப்பட உள்ளது.,  இந்த வசதியின் மூலம் இன்னும் 2 ஆண்டுகளில் சுங்கச்சாவடி அற்ற இந்தியா உருவாகும்.   இந்த வருடம் மார்ச் மாதத்துக்குள் சுங்கச் சாவடி வருமானம் ரூ.34000 கோடி கிடைக்கும்.  ஜிபிஎஸ் வசதி மூலம் இன்னும் 5 அண்டுகளில் ரூல்.1,34,000 கோடி கிடைக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.