சென்னை: ஓஎம்ஆர் எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலையில்  இன்றுமுதல் 4 சுங்கச்சாவடிகள் முழுமையாக மூடப்படுவதால், வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூ ச்சடைந்துள்ளனர்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமுள்ள சென்னையின் புறநகர் பகுதியான சோழிங்கநல்லூர் வரை  பல பகுதிகள்  சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.  பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளாக இருந்ததால் பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம் சாலை, சோழிங்க நல்லூர் கலைஞர் சாலை ஆகிய 4 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

அவைகள் சென்னை மாநகராட்சியுடன்  இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதுபோல மெட்ரோ ரயில் பணி சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்பட உள்ளது.

இதையடுத்து, அடையாறு,  மத்திய கைலாசில் இருந்து சிறுச்சேரி வரை உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த  4 சுங்கச்சாவடி கள் இன்று முதல் மூடப்படுகிறது.  பல இடங்களில் வாகன நெரிசலுக்கு சுங்கச்சாவடிகளே காரணமேக அமைந்து விடுகிறது. தற்போது, அதை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அகற்றி உத்தரவிட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

அதேவேளையில்,  பழைய மாமல்லபுரம் சாலையில் மெட்ரோ பணிகள் நடக்க இருப்பதால் மீண்டும் வாகன நெரிலுக்கு வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.