.

டில்லி

தார் எண்ணை வங்கிக் கணக்கு  எண்ணுடன் இணைக்க கொடுத்திருந்த கெடுவை அரசு ரத்து செய்துள்ளது.

அனைத்து வங்கிக் கணக்குகள்,  தபால் அலுவலக முதலீட்டு கணக்குகள் காப்பீட்டு கணக்குகள் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.   முதலில் இதற்கான கடைசி தேதியாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த டிசம்பர் 31 அதன்பின் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு

 

அந்த உத்தரவை தற்போது மத்திய அரசு மீண்டும் மாற்றி உள்ளது.  அதில்  இணைப்புக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடைசி தேதியாக இந்த புது அறிவிப்பில் எந்த தேதியும் குறிப்பிடவில்லை.

இதிலிருந்து ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு எண்ணுடன் இணைக்க காலெக்கடு இல்லை என்பது தெரியவருகிறது.

[youtube-feed feed=1]