டில்லி

த்திய அரசு ரூ.2000 நோட்டுக்களை மாற்ற காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என உறுதி அளித்துள்ளது.

கடந்த மே மாதம் 19 ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, இந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ஆம்  தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தது.

மக்களவையில் இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா? என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.  மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இதற்கு எழுத்து மூலம் பதிலளித்தார்.

அவர், ‘தற்போதைய நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவும் அரசிடம் இல்லை’ எனத் தெரிவித்தார்.

மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளைப்போல உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் திட்டம் எதுவும் அரசிடம் உள்ளதா? என்ற கேள்விக்கும், இல்லை என அவர் பதிலளித்தார்.