சென்னை:

ன்று தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, நேற்று இரவு கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் குவிந்ததால, பஸ்சில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவியது. இதன் காரணமாக சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இணைந்து பேருந்து நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைந்துசெல்ல செய்தனர். இதன் காரணமாக நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

இன்று வாக்குபதிவு மற்றும் 4 நாட்ள் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். ஆனால், தமிழக அரசு தேவையான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று இரவு 7 முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், பேருந்துகள்  சரியான முறையில் பஸ்கள் இயக்கப்படவில்லை குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோல சில  அரசு மற்றும் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொது மக்கள் தர்ணா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்களை களைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.   ஆனால் மக்கள் செல்ல மறுத்ததால் அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.  இதனால் சற்று நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் துரத்தி அடித்ததில் பயணிகளில் பலருக்கு காயம் என தகவல்.  உரிய அளவில் பேருந்துகள் இல்லாததால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது . இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இன்று அதிகாலை முதலே, சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை செல்ல ஏராளமானோர் கோயம்பேடு  பஸ்நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.