ஸ்ரீநகர்: ராகுலின் யாத்திரை  தற்போது பலத்த பாதுகாப்புடன் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக திடீரென நிறுத்தப் பட்டது.   இதையடுத்து, பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை என காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

ராகுலின் ஒற்றுமை யாத்தை எனப்படும் பாரத் ஜோடோ யாத்திரை இறுக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய நிலையில் பல மாநிலங்களை கடந்து தற்போது,  ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. நேற்று  பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது. அவருடன் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர்.

னிஹால் சுரங்கத்தை கடந்தபோது, மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி ராகுல் காந்தியை பாதுகாப்பு வாகனத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி  யாத்திரையை காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது.

 உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடைபயணத்தை மீண்டும் தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. பாதுகாப்பு விலக்கப்பட்டதால், மக்கள் பாதுகாப்புப் பகுதியை மீறிச் சென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து ஜம்மு போலீசார் கூறுகையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை. காஷ்மீரில் நடைபெற்றுவரும் ஒற்றுமை நடைபயணத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பயணத்தின்போது பங்கிஹாலில் பெருங்கூட்டம் இணைவது குறித்து அமைப்பாளர்கள் எந்த தகவலும் தரவில்லை என விளக்கமளித்தனர்.