கோவை: மின்சாரத்துறைக்கு தேவையான உபகரணங்கள் கொள்முதலில் எந்த தவறும் நடைபெறவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் ரூ. 9.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், சர்வதேச ஹாக்கி மைதானம் மற்றும் மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் குறித்து அதிகாரிகளுடன் சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, கோவை, ரூ9.67 கோடி மதிப்பில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட இருப்பதாககூறியவர் . அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
கோவை மாநகராட்சியை பொருத்தவரை ஏறத்தாழ ரூ935 கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த முறை கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர், கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலை அமைப்பதற்காக ரூ200 கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். அதுபோல, கோவைக்கு வருக தந்த முதலமைச்சர், ஏற்கனவே தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சாலைகள் அமைப்பதற்கான சாலைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விரைவில் அரசின் ஒப்புதலை பெற்று அந்தப் பணிகளும் தொடங்க இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் பணிகள், போர்க்கால அடிப்படையில் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சாலை அமைப்பதற்கான பணிகளின் ஒப்புதல் வருவதற்கு முன்பே பாதாள சாக்கடை பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மின்சாரத் துறையின் சார்பில் கொள்முதல் செய்யப்படுகின்ற அனைத்து உபகரணங்களும் முறையாக ஆன்லைன் மூலமாக டெண்டர் விடப்படுகிறது. அதற்காக ஒரு குழு இருக்கிறது. அந்த குழு தான் விலைப்பட்டியலை நிர்ணயம் செய்து, விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்பதை தீர்மானித்து அதற்கான உத்தரவுகளை வழங்குகிறது.
கடந்த காலங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. இதில் தலையீடுகள் ஏதுமில்லை.
இவ்வாறு கூறினார்.