மும்பை:
ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும்பாலானோரின் சம்பளத்தை 10 முதல் 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்தபோது, அம்பானியும் தனது ஊதியத்தை இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியிலிருந்து கைவிட முடிவு செய்திருக்கின்றார்.
பணக்கார இந்தியரான முகேஷ் டி அம்பானி, தொடர்ந்து 12-வது வருடமான இந்த வருடத்தில் தன்னுடைய நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து தன்னுடைய வருடாந்திர சம்பளத்தில் ரூபாய் 15 கோடியை நிறுத்தி வைத்திருந்தார், மார்ச் 31- ஆம் தேதியோடு இந்த வருட நிதி ஆண்டு முடிந்த நிலையில், கொரோனா கருத்தில் கொண்டு தன்னுடைய மொத்த சம்பளத்தையும் கைவிட முடிவு செய்துள்ளார் அம்பானி. 2008- ஆம் ஆண்டு முதல் முகேஷ் அம்பானி தன்னுடைய சம்பளம், தேவைகள், மற்றும் கமிஷனை ஒன்றாக சேர்த்து ரூபாய் 15 கோடி வாங்காமல் விட்டிருக்கின்றார், ஆனால் தற்போது அது 24 கோடிக்கும் மேலாக உள்ளது.
முகேஷ் அம்பானி மட்டுமல்லாமல் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர்களாக உள்ள அவருடைய உறவினர்கள் நிகில் மற்றும் ஹீத்தல் மெஷ்வாணி, கடந்த நிதியாண்டு முடிவடையும்போது (March 31-2019) நல்ல வருமான அதிகரிப்பை கண்டனர்.
ஆனால் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் தொழில்துறை ஆரோக்கியத்தை சீர்குலைத்துள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் டி அம்பானி, தானாக முன்வந்து தன்னுடைய சம்பளத்தை கைவிட்டுள்ளார் என்று, அந்த நிறுவனத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த நிலை முடிவடையும் வரை தாங்கள் முழு சம்பளத்தை வாங்கப் போவதில்லை என்று அந்நிறுவனத்தின் இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது.
மேலும் அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்றால் அந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் 10 முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்ட போதே அம்பானி தன்னுடைய முழு சம்பளத்தையும் துறப்பதாக முடிவெடுத்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்து, தங்களுடைய நிறுவனம் மற்றும் நிறுவனத்தை சார்ந்த வணிகங்கள் அனைத்தும் முழுமையாக சரியாகும் வரை, தான் இதை தொடரப் போவதாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் டி அம்பானி கூறியுள்ளதாக தெரிகிறது.
இதேபோன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்ற நிர்வாக இயக்குனர்களும் தங்களுடைய சம்பளத்தை 50% வரை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் நிறுவனத்தின் விற்பனைப் பங்கு மாறாமல் ரூபாய் 9.53 கோடியிலேயே உள்ளது, மேலும் நிறுவனத்தின் மேல் வருமானம் 31 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்ந்துள்ளது, ஓய்வூதிய சலுகைகள் 71 லட்சமாக உள்ளது.
முகேஷ் அம்பானியின் உறவினர்களான நிகில் மெஷ்வாணி மற்றும் ஷீத்தல் ஆர் மெஷ்வாணி ஆகியோரின் இழப்பீடு 20.57 கோடியிலிருந்து 24 கோடிக்கு உயர்ந்துள்ளது. மேலும் அவர்கள் 2017-18- ஆம் நிதியாண்டில் ஒவ்வொருவரும் ரூபாய் 19.99 கோடியை சம்பாதித்தனர், 2016-17 இல் ரூபாய் 16.5 8 கோடியும், 2015-16- இல் நிகில் 16.42 கோடி மற்றும் ஷீதல் 14.4 1 கோடி, 2014-15- இல் ஒவ்வொருவரும் 12.01 கோடி சம்பாதித்துள்ளனர்.
மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான, நிர்வாக இயக்குனர் பி எம் எஸ் பிரசாத் கடந்த வருடம் தன்னுடைய சம்பளம் ரூபாய் 10.01 கோடியிலிருந்து ரூபாய் 11.15 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டில் இருந்து தன்னுடைய வருவாய் முழுமையாக உயர்ந்ததாக அவர் உணர்ந்துள்ளார். 2014-15 இல் 6.03 கோடியும், 2015-16 இல் 7.23 கோடியும், 2016-17இல், 8.99 கோடியும் பெற்றுள்ளார்.சுத்திகரிப்பு தலைவரான பவன் குமார் கபில் அவர்களின் இழப்பீடு ரூபாய் 4.17 கோடியிலிருந்து 4.04 கோடி வரை சரிந்துள்ளது.
மேலும் நீதா அம்பானியையும் சேர்த்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அல்லாதவர்கள் தங்களுடைய கமிஷனாக 1.15 கோடியை பெற்றனர். அதற்கு முன்னால் இருந்த அனைத்து நிதி ஆண்டுகளிலும் கமிஷன் 1.65 கோடிக்கும் குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.