சென்னை:

மருத்துவ முதுகலை படிப்பில் மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்ற உயர்நீதிமன்றம் ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேல் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் ஏற்கனவே 2 நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 3வது நீதிபதி சத்தியநாராயணா இன்று விசாரித்து உத்தவு பிறப்பித்தார். இதன்படி ‘‘மாநில அரசின் விதியை பின்பற்ற கூடாது. மருத்துவ கவுன்சில் விதியையே பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக புது விதியை உருவாக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் சலுகை கிடைக்காது.