டெல்லி: மத்திய அரசு ஊழியா்களின் பணி ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தாலும், இடைப்பட்ட நேரங்களில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், . தேசத்தின் இளைஞர்களுக்கு, குறிப்பாக 2000க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, கிடைக்கும் வேலை வாய்ப்பு தரவுகளின் அடிப்படையில். சிவில் சர்வீசஸ்களில் ஒரே சீரான தன்மையை உருவாக்க அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பணி ஓய்வு வயதை அதிகபட்சமாக 30 ஆண்டுகள் அல்லது 60 வயதை எட்டும் வகையில் மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பினார்
உறுப்பினர் சார்பில், மக்களவையில் அரசு ஊழியா்களின் பணி ஓய்வு மாற்றுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சமீக காலமாக அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 62ஆக உயர்ப்பவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அது பேசும்பொருளாகவே மாறி வருகிறது.
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மத்திய அரசு ஊழியா்கள் 60 வயதில் பணி ஓய்வு பெறுகிறாா்கள். இதை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. குடிமைப் பணிகளில் இளைஞா்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அமைச்சகங்கள் மற்றும் பிற அரசு துறைகளுக்குத் தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில் ரோஸ்கா் மேலா (வேலைவாய்ப்பு முகாம்களை) மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இது கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும்’ என்று குறிப்பிட்டிருந்தது.