சென்னை

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு கட்சியில் இதுவரை எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை.

.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக தேர்வான விஜயதாரணி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.கவில் இணைந்தார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜயதாரணி பா.ஜனதாவில் தன்னை இணைத்து கொண்டதால், அவரின் சட்டசபை உறுப்பினர் பதவி பறிபோனது.

விஜயதாரணி சமீபத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லிக்கு சென்று, விஜயதாரணி நேரில் சந்தித்த போது கட்சி பொறுப்பு தொடர்பாக அவர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியாக பேசப்பட்டது. ஆயினும் தற்போது வரையில் பா.ஜனதாவில் விஜயதாரணிக்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜயதாரணியும் கலந்து கொண்டார்.

அப்போது தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன. ஆனால் அதிலும், விஜயதாரணியின் பெயர் இடம் பெறவில்லை என்பதால், அவர் ஏமாற்றம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜயதாரணி இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்,

“விரைவில் பதவியோ பொறுப்போ வழங்கப்படும் என்று, மேலிடமும், கட்சியும் உறுதி அளித்திருக்கிறது. நிச்சயமாக அதற்கு உண்டான செய்தி உங்களை வந்து சேரும். ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தேன். இனிமேல் அதிருப்தி வராத அளவுக்கு உறுதி அளித்திருக்கிறார்கள். உறுதியாக, நிச்சயமாக நல்ல பதவி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது நீண்டகால அனுபவம் வாய்ந்த அரசியல் பயணம் பா.ஜ.க.வை வழிநடத்தக்கூடிய பொறுப்பு அவர் முன் வைக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை”

என்று கூறியுள்ளார்.