சென்னை,

டிகர் கமலஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ந்தேதி தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கட்சி அறிவிப்பு கிடையாது என்று நடிகர் கமலஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமலஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறியிருந்தார். அது தொடர்பான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள் பேட்டியில், வரும் 7ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறி இருந்தார். இதை அவர் கட்சி அறிவிப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு பரபரப்பாக்கின. இது கமல் ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கட்சி அறிவிப்பு கிடையாது என்று நடிகர் கமலஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.

பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும் என்று தனது டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது என்று கமல்ஹாசன் கூறி உள்ளார்.