கமதாபாத்

த்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாலகோட் விமானப்படை தாக்குதலில் எந்த ஒரு பாகிஸ்தானியரும் மரணம் அடையவில்லை என தெரிவித்துள்ளார்.

 

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் கொல்லபட்டதாக பாஜகவினர்  தெரிவித்தனர்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பாஜக பெண் தொண்டரகள் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துக் கொண்டு உரையாற்றினார். கடந்த வாஜ்பாய் அரசு மற்றும் மோடியின் அரசின் அமைச்சராக இருந்ததால் சுஷ்மா வாஜ்பாய் அரசுக்கும் மோடி அரசுக்கும் உள்ள வேறுபாடு குறித்து பேசினார்.

சுஷ்மா ஸ்வராஜ், “கடந்த வாஜ்பாய் அரசை விட மோடி அரசால் இந்த ஐந்து வருடங்களில் பல சாதனைகளை செய்ய முடிந்தது. இதற்கு முக்கிய காரணம் அப்போது வாஜ்பாய் அரசு கூட்டணி அரசாக இருந்தது. இதனால் வாஜ்பாய் பல நன்மைகள் செய்ய முயன்றும் அவரால் செய்ய முடியவில்லை.

தற்போதைய மோடி அரசு அறுதி பெரும்பானமை பெற்ற அரசாக உள்ளது. மோடி பல நன்மைகள் செய்து சாதனைகள் நிகழ்த்தி உல்ளார். இந்த சாதனைகள் தொடர்ந்து நடக்க நீங்கள் மோடிக்கு பெரும்பான்மை அளிக்க உதவ வேண்டும். மோடி செய்த சாதனைகளில் முக்கியமானது பாலகோட் விமானப்படை தாக்குதல் ஆகும்.

புல்வாமா தாக்குதலை ஒட்டி நடத்திய பாலகோட் தாக்குதலை நமது அரசு சுய பாதுகாப்புக்காக நடத்தியது. நாம் அப்போதே சர்வதேச அரசுகளிடம் இந்த தாக்குதல் நமது சுய பாதுகாப்புக்காக நடத்துகிறோம் என்பதையும் எந்த ஒரு பாகிஸ்தான் குடி மகனோ அல்லது பாக் ராணுவ வீரரையோ தாக்க மாட்டோம் என உறுதி அலித்திருந்தோம்.

அதன்படி பாலகோட் தாக்குதல் நமது சுயபாதுகாப்புக்காக நடத்தியது மட்டுமே ஆகும். அப்போது நமது விமானப்படை புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதப் படைகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி அழித்தது.  இந்த தாக்குதலில் எந்த ஒரு பாகிஸ்தான் குடிமகனோ அல்லது எந்த ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரரோ மரணம அடையவில்லை” என தெரிவித்துள்ளார்.