கேரளாவின் மலப்புரம் பகுதியிலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற பாஸ்கரன் வேலாயுதன் அங்கு தனக்கு இழைப்பப்பட்ட அநீதியால் உணவின்றி, தங்கவும் இடமின்றி எனக்கு சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று கதறுகிறார்.

baskaran

50 வயதாகி பனியிலிருந்து ஓய்வுபெற்ற பாஸ்கரன் தனக்கு சேரவேண்டிய செட்டில்மண்ட் பணமும் இரண்டு மாத சம்பள பாக்கியும் கிடைக்காமல் கடந்த 11 மாதங்களாக துபாயில் செல்லொண்ணா துயரம் அனுபவித்து வருகிறார்.
பாஸ்கரன் தனது சோகக்கதையை துபாயிலிருந்து வெளிவரும் ஒரு நாளிதழிடம் மனம் திறந்து கொட்டியிருக்கிறார் இவர் ஒரு திரைச்சீலை தைக்கும் டெய்லர் ஆவார், துபாயில் அமைந்திருக்கும் சிரிய நாட்டு நிறுவனமான ரோசா ஃபர்னிச்சர் பேக்டரி என்ற நிறுவனத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டுமுதல் பணிபுரிந்து வருகிறார். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக கம்பேனி வண்டியில் தொழில்ரீதியான பயணம் ஒன்றை மேற்கொள்ளும் போது கொடூரமான விபத்தொன்றை சந்தித்து அதில் அதிர்ஷ்டவசமாக உயிரதப்பியிருக்கிறார். ஆனால் ஒரு கையும் ஒரு காலும் செயலிழந்து விட்டன. அதன்பின்னர் கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்து சிகிசை பெற்றதாகவும், அவரது விலாவில் மட்டும் 15 ஸ்க்ரூக்கள் போடப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் இப்போதும் அவரால் சரியாக நடக்க இயலாது.
நான் அந்த நிறுவனத்துக்காக 20 ஆண்டுகள் உண்மையாக பணி செய்திருக்கிறேன். எனது மருத்துவச் செலவுகளைக்கூட நான் அவர்களிடம் கேட்டதில்லை. ஆனால் எனக்கு சேரவேண்டிய 24,000 தினார்களைத் தராமல் அந்நிறுவனம் இழுத்தடிக்கிறது. எனது போன்கால்களைக்கூட அவர்கள் எடுப்பதில்லை. நான் அந்நிறுவனத்தின்மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். எனக்கு ஏற்கனவே ஏகப்பட்ட கடன்களும் கட்ட வேண்டிய லோன்களும் இருக்கின்றன. இப்போது எனக்கு வேலையுமில்லை, சாப்பாட்டுக்கு வழியுமில்லை என்று கதறுகிறார்.
அந்த நிறுவனத்தை பத்திரிக்கையாளர்கள் தொடர்புகொண்டபோது அவர்களிடமிருந்து எந்த ஒரு சரியான பதிலும் வரவில்லை. தற்சமயம் பாஸ்கரனுக்கு நல்மனம் கொண்ட சிலர் உதவி செய்கிறார்கள், தனது நண்பருக்கு சொந்தமான ஒரு பலசரக்கு குடோனில் தங்கியிருக்கிறார். இந்த துன்பத்தோடு அவருக்கு சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் விபத்தில் முறிந்த காலில் பயங்கரமான வலி ஆகியவை தரும் வேதனையும் வாட்டி வதைக்கின்றன. “ஒரு வேளை உணவுக்கே வழியில்லை என்றபோது நான் மருத்துவ செலவுக்கு எங்கே போவேன்? எனக்கு இங்கேயே கிடந்து சாவதைத் தவிர வேறு வழியில்லை” என்று கண்ணீர் வடிக்கிறார் பாஸ்கரன்.
அவருக்காக தமிழ்நாட்டிலிருந்து செயல்படும் India’s National Domestic Workers Movement என்ற அமைப்பு குரல்கொடுத்து வருகிறது. அப்பிரச்சனையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட்டு துபாய் அரசுடன் பேசி பாஸ்கரனுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை விடுத்து வருகிறது.