டெல்லி:

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் யாரும் பட்டினியால் வாடக் கூடாது எனறு பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. ஆனால், கொரோனாவின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் ஊரடங்கை வரும் 30ந்தேதி வரை நீட்டித்துள்ளன.

இந்த நிலையில், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள  ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் யாரும் பட்டினியால் வாடக் கூடாது என்றும்,   செப்டம்பர் மாதம் 10ந்தேதி வரை 10 கிலோ இலவச அரிசி, கோதுமை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

 

www.ns7.tv | #CoronaVirus | #COVID19 | #Congress | #BJP