லக்னோ
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்துள்ளன.
உத்தரப் பிர்தேச மாநிலத்தில் பீர் மற்றும் ஒயின் அருந்துவோர் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்துள்ளன. சமீபத்தில் இம்மாநில அரசின் ஆயத்தீர்வை துறை சார்பில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகின. இதன் மூலம் அன்றாட மதுவின் விற்பனை மூன்று பில்லியன் அளவில் உயர்ந்திருப்பது தெரிந்துள்ளது. இந்த விற்பனை கடந்த இரண்டு வருடங்கள் வரை வெறும் ஒரு பில்லியனாக மட்டுமே இருந்துள்ளது.
இந்த புதிய புள்ளிவிவரத்தின்படி, உ.பி.யின் மாவட்டங்களில் ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் அளவில் விற்பனை இல்லாதவையே இல்லை எனலாம். இதன் பல மாவட்டங்களில் 12 முதல் 15 கோடி ரூபாய் வரை விற்பனையாவதும் உண்டு. டில்லிக்கு அருகிலுள்ள நகரங்களான நொய்டா மற்றும் காஜியாபாத்தில் ரூ.12 முதல் 15 கோடி அளவில் மது விற்பனை உள்ளன. இது போல ஆக்ராவில் ரூ.12 முதல் 13 கோடி வரையும் உள்ளன.
மற்ற முக்கிய நகரங்களில் மீரட்டில் சுமார் ரூ.10 கோடி, லக்னோவில் ரூ.12 கோடி, கான்பூரில் ரூ.8 கோடி என விற்பனை உயர்ந்துள்ளன. புனித நகரான வாரணாசியில் சுமார் ரூ.6 கோடி மற்றும் பிரயாக்ராஜில் ரூ.4.5 கோடி என விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது உ.பி மாநில அளவில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு டிரில்லியன் ரூபாய் அளவில் மது விற்பனையாகின்றன.
இந்நிலையால், உபி வாசிகளில் மது அருந்துவோர் எண்ணிக்கையும் பல மடங்குகள் உயர்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணமாக, மது விற்பனைக்கானப் பகுதிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பாஜக ஆளும் உபி., யில் மது விநியோகத்தில் பலவகை கண்காணிப்புகள் தீவிரமாக்கப்பட்டிருப்பதும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.