சென்னை:

மிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எங்கும் கிடையாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

வவ்வால் மூலம் பரவும் நிபா எனப்படும் வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பதவியது. அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும், தமழக சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இமாச்சல் மாநிலத்தில் ஒரே இடத்தில் பல வவ்வால்கள் இறந்து கிடந்தால், அங்கும் நிபா வைரஸ் பரவியிருப்பதாக வதந்திகள் பரவியது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எங்கும் கிடையாது என்றும், கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார்.

மேலும், பறவை கொத்திய பழங்களை சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்தியும்,  நிபா வைரஸ் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.