சென்னை: 2024ம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதியில்லை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இதனால் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஆண்டு தோறும் பல லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்குவதற்கு தகுந்த வேலைவாய்ப்பு இந்தியாவில் இல்லை. இதனால், பலர் படித்தும் வேலையில்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்
தற்போதைய நிலையில், இந்தியாவில் மொத்தம் 3500 பொறியியல் கல்லூரிகளும், 3400 பாலிடெக்னிக்குகள் மற்றும் 200 ஆர்க்கிடெக்சர் மற்றும் கட்டிடக்கலை பள்ளிகள் உள்ளன. 2022 இல் உள்ள இந்தியாவில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி) ஆகியவை முதல் தரவரிசையில் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 1135 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த 1135 கல்லூரிகளில் 1015 தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் 120 அரசு/அரசு கல்லூரிகளும் உள்ளன.
இந்த நிலையில், 2024ம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதியில்லை” அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்து உள்ளது.
ஆண்டுக்கு 10ஆயிரம் மாணவர் சேர்க்கை கொணடு 25ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் தொண்டு நிறுவனங்கள், புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.