சென்னை: இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை என இபிஎஸ், ஓபிஎஸ் மீது நமது சசிகலாவின் பத்திரிகையான எம்ஜிஆர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
சசிகலாவின் அரசியல் பிரவேசம் இன்னும் சில நாட்களில் அசுர வேகம் எடுக்கும் ; எதிரிகள் பதறும்படி விசுவரூபம் எடுப்பார் துரோகிகளுக்கு மீண்டும் ஓர் எச்சரிக்கை ”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதுதான் இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை ; தேர்தல் களம் புகுவோம் என கூறியுள்ளது.
இதுதொடர்பாக டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் அவதூறுகளுக்கு இனி துளியும் இடமில்லை வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், ஜெயலலிதாவை இழந்து தவிக்கும் தொண்டர்களின் மனக்குமுறலை புரிந்து கொள்ளாமல், மனம்போன போக்கில் பிதற்றும் கபடதாரிகளின் சுயலாபத்துக்காக இயக்கம் சிதறுண்டு போவதை சசிகலா ஒருகாலமும் ஏற்கவும் மாட்டார்கள். விரும்பவும் மாட்டார்கள்.
உண்மைத் தொண்டர்கள், விசுவாசமிக்க கழக போர்வாள்களை அரவணைத்து காத்திட வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார்கள். சசிகலாவின் வருகையால் கழகத் தொண்டர்களுக்கு புதுவேகம் ஏற்பட்டு விட்டது.
கழகம் புத்துணர்ச்சி பெறும் நடவடிக்கை தொடங்கிவிட்டது. இனி துரோகிகளின் எண்ணங்கள் எல்லாம் தவிடு பொடியாகும். வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை, துரோகிகளை, தீயசக்தி கூட்டங்களை புறமுதுகிடச் செய்து வெற்றி வாகை சூடுவார்.
கழகத்தை காத்திட எல்லா வித முயற்சிகளிலும், நடவடிக்கைகளிலும் கண் துஞ்சாது ஈடுபட்டு ஒன்றரை கோடி தொண்டர்களை ஒரு குடையின்கீழ் கட்டுக் கோப்பாக கொண்டு வந்து சேர்த்திட சசிகலா அரும்பாடுபட்டு வருகிறார்கள். பெருமுயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்தகைய செயலில் ஈடுபட காரணம் பதவி ஆசை அல்ல. அதிகார ஆதிக்க ஆசை அல்ல. ஜெயலலிதாவின் கொள்கை, லட்சியம், கனவை நிறைவேற்ற வேண்டும்.
சாதனை படைப்பார், புதிய வலாற்றை உருவாக்குவார், புறப்படுங்கள் புறநாநூற்று படைகளே! தேர்தல் களம் நோக்கி என எழுதப்பட்டுள்ளது.