துரை

துரை உயர்நீதிமன்ற கிளை பட்டாசு ஆலை விபத்துகளில் தொடர்புடையோருக்குக் கருணை காட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளது.

சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் அதிக அளவில் உள்ளது.  இங்கு அடிக்கடி வெடி விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழக்கும் நிலை ஏற்படுகிறது.    இதில் பல நிகழ்வுகளில்  சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவரப் பின்பற்றாததே காரணமாக உள்ளது.

சமீபத்தில் நடந்த சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.  உரிமையாளர் மற்றும்  அவரது மனைவி ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்தார்.  இந்த முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி,

”இந்த ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்கிறேன்.  ஏனெனில் பட்டாசு வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்குக் கருணை காட்ட முடியாது. இத்தகைய பட்டாசு விபத்தில் அப்பாவி மக்களின் உயிர் இழப்பு காரணமாகச் சட்ட விரோத செயல்பாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை”

எனத் தெரிவித்து பட்டாசு ஆலை  உரிமையாளர் , அவரது மனைவி முன்ஜாமீன்  மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.