பெங்களூரு: கர்நாடகாவில் 15 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: அடுத்த 15 நாள்களுக்கு போராட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

எனவே, கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. முகக் கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை. ஆனால் இயங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கருத்துகளைக் கேட்டுப் பெற்றுள்ளோம்.

15 நாள்களில் தேர்வுகள் முடிந்த பின்னர் அதுகுறித்து ஆய்வு செய்யப்படும். கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்ச் தொடக்கத்தில் 300 என்று இருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை மாத இறுதியில் 3000 என்ற கணக்கில் பாதிப்பு பதிவாகி வருகிறது என்று தெரிவித்துள்ளது.