பீகார்:

ரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.


பீகார் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊரில் வேலை எதுவும் இல்லாத காரணத்தால், பஞ்சாபிற்கு எப்ப்டி திரும்பி செல்வது என்பது குறித்து அங்குள்ள விவசாயிகளிடம் கேட்டு வருவதாக தெரிகிறது.

சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு சொந்தமாக ஓரளவு நிலம் இருந்தாலும், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் இதுகுறித்து பேசிய விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பீகார் மாநிலத்தின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த லால் யாதவ் பேசுகையில், நான் 13 வயதில் பஞ்சாபி வந்தேன். இதனால் பஞ்சாப் எனக்கு இரண்டாவது வீடாக மாறி விட்டது. நான் சுமார் 8 மாதங்கள் பீகாரில் இருக்கிறேன், ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு, எனது மகனின் திருமணத்திற்காக வீட்டிற்கு சென்ற போது அங்கேயே மாட்டிக்கொண்டேன். பீகாரில் வறுமை நிலவுகிறது. வேலை எதுவும் இல்லை. நான் பஞ்சாபிற்கு திரும்ப முடிந்தால் தான் சம்பாதிக்க முடியும், ”என்றார்.

ஜம்ஹூரி கிசான் சபாவின் பொதுச் செயலாளரும் சந்தூ தெரிவிக்கையில், எனது முதலாளியிடம் இருந்து தினமும் எனக்கு அழைப்பு வருகிறது. அவர்கள் திரும்பி வரும்படியும், போக்குவர்த்து வசதியை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்றார்.

கிஷன்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி முகமது ஜல்பா, தான் பஞ்சாபிற்கு திரும்பி போய் சம்பாதிக்க ஆர்வமாக உள்ளேன் அவர் கூறியுள்ளார்.