மும்பை: கொரோனா பரவல் காரணமாக, ஜைனர்களின் பர்யூஷன் விழாவை முன்னிட்டு, மும்பை நகரில் ஜெயின் கோயில்கள் திறப்பதை அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மராட்டிய மாநில அரசு.
முன்னதாக, இம்மாதம் 15 முதல் 23ம் தேதி வரை, பர்யூஷன் வைபவத்தை ஒட்டி, ஜெயின் கோயில்களை திறந்துவைக்க அனுமதிக்க வேண்டுமென ஜைனர்கள் சமூகத்தின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்படியான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதானது, மிகப்பெரிய ஆபத்தில் முடியும் என்பதால், கோயில்களை திறக்க அனுமதிக்க முடியாது என்று மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கோயில்கள் திறப்பிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது அம்மாநில அரசு. நீதிபதிகள் எஸ் ஜே காத்தவாலியா மற்றும் மாதவ் ஜம்தார் அடங்கிய அமர்விடம் இந்த பதில் சமர்ப்பிக்கப்பட்டது.