புதுடெல்லி:
த்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இல்லத்தின் முன்பு இந்திய இளைஞர் காங்கிரஸின்(IYC) ஆர்வலர்கள் நேற்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA) 2020ஐ எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். இது ஒரு சிலருக்கு மட்டுமே லாபம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.
டெல்லி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் பவார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஐஒய்சியின் ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பேசிய ஹரிஷ் பவார் தெரிவித்துள்ளதாவது: இந்த அரசாங்கம் சுற்றுச் சூழலையே பணம் கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது. மேலும் சாதாரண மக்களின் வாழ்க்கையை பணயம் வைத்து இதில் வரும் லாபத்தை தொழில்துறை நண்பர்களுக்கு அளிக்க விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் தொழிலதிபர்களின் நலனுக்காக நாட்டின் சுற்றுச் சூழல் அமைப்பை விற்க சதித்திட்டம் தீட்டிக் கொண்டு வந்ததுதான் இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA) 2020. இது சாதாரண மக்களுக்கு அல்லாமல் ஒரு சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே லாபம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சாடியுள்ளார்.