குயிட்டோ: சாமியார் நித்தியானந்தா தங்கள் நாட்டின் அருகே எந்த தீவையும் வாங்கவில்லை என்று ஈக்குவடார் அரசு கூறியிருக்கிறது.
பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்களை அமைத்து நடத்தி வந்த நித்தியானந்தா மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். குஜராத் ஆசிரமத்தில் தமது மகள்கள் மாயமாகி விட்டனர் என்று அவர்கள் பெற்றோர் புகாரளிக்க வம்பில் மாட்டினார் நித்தியானந்தா.
தற்போது ஈக்குவடார் அருகே ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாச நாடு என்று பெயர் வைத்து அறிவித்தார். கொடி, பாஸ்போர்ட் என அறிமுகப்படுத்த இந்த செய்தி வைரல் ஆனது.
இந் நிலையில் எந்த தீவையும் வாங்கவில்லை என்று ஈக்குவடார் அரசு கூறியிருக்கிறது. இது குறித்து தூதரக அதிகாரி கூறியிருப்பதாவது:
நித்தியானந்தா எந்த தீவையும் வாங்கவில்லை. தஞ்சம் கோரினார். ஆனால் அரசு மறுத்துவிட்டது. எனவே, அவர் ஹைதி நாட்டுக்கு சென்றுவிட்டார். எங்களிடம் இல்லை என்று மறுத்திருக்கிறது.