‘நான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன்.’ “எனவே, இமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை” என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ..பி. நட்டா கூறியுள்ளார்.

பாஜக-வின் ஹிமாச்சல் உட்பட பல மாநில பிரிவுகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை விரைவில் தொடங்க உள்ளது.

மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, நட்டாவிற்கு பதிலாக அடுத்த தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையில், நாட்டிலேயே காங்கிரஸ் அரசுகளில் இமாச்சலப் பிரதேசம் மிகவும் ஊழல் நிறைந்த மாநிலம் என்று நட்டா குற்றம் சாட்டியதை அடுத்து மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்ட நிலையில் இதனை ஜெ.பி. நட்டா நிராகரித்துள்ளார்.

பாஜகவின் தேசியத் தலைவராக ஜெ.பி நட்டா 2020 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.