டெல்லி: மத்திய ஜெட்டில் நிதியமைச்சர் பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு உள்பட  மத்தியபட்ஜெட்டில்,  பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

 பட்ஜெட்டின்போது,  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ”வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்  கோல்நோக்கி வாழுங் குடி.” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி  பட்ஜெட்டில்  பேசினார்.

புதிய வருமான வரி சட்டம்  கொண்டு வரப்படும்,  10ஆயிரம் மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை மற்றும், ஸ்விக்கி ஷோமடே உள்பட ஆன்லைன் பணி ஊழியர்களுக்கு  புதிய காப்பீடு திட்டம், புதிதாக 120 இடங்களில் சிறிய விமான நிலையம் அமைக்கப்படும், உயிரிகாக்கும் மருந்துகளுக்கு சுங்கவரியில் இருந்துவிலக்கு அளிக்கப்படும்.

 உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.

37 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு

லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து,  லித்தியம் பேட்டரி, சிங்க், கோபால்ட் உள்ளிட்ட 12 வகையான அரிய வகை கனிமங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிக்கு இறக்குமதி வரியில் விலக்கு அளிக்கப்படும்.

குறிப்பிட்ட சுற்றுலா குழுவினருக்கு விசா விண்ணப்ப கட்டணத்தில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படும் என்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

எல்.இ.டி. திரைக்கான இறக்குமதி சுங்கவரி 20% ஆக அதிகரிப்பு

சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி   ரூ. 30 ஆயிரமாக அதிகரிப்பு

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

“ரூ. 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை. அனைத்து வரி செலுத்துவோருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகள் மற்றும் விகிதங்கள் மாற்றப்படுகின்றன,” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார்.

மேலும்வரி விகித கட்டமைப்புகளை பின்வருமாறு திருத்த நான் முன்மொழிகிறேன்

0 முதல் ரூ. 4 லட்சம் வரை – இல்லை,

ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை – 5%,

ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை – 10%,

ரூ. 12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை – 15%,

ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை – 20%,

ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை – 25%

மற்றும் ரூ.24 லட்சத்திற்கு மேல் – 30%.

சாதாரண வருமானம் ரூ.12 லட்சம் வரை வரி செலுத்துவோருக்கு மற்றவை மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு விகித வருமானத்தை விட, ஸ்லாப் விகிதக் குறைப்பு காரணமாக கிடைக்கும் நன்மைக்கு கூடுதலாக வரிச் சலுகை வழங்கப்படுகிறது, இதனால் அவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை…”

விகிதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் வரி செலுத்துவோருக்கு  TDS வரம்புகள் பகுத்தறிவு செய்யப்படும்.

வரி செலுத்துவோருக்கான வரம்பு வரம்பு எல்.ஆர்.எஸ். பணம் அனுப்பும் டி.சி.எஸ். வரி ₹7 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்வு

வாடகைக்கான டி.டி.எஸ். வரம்பு ₹6 லட்சமாக உயர்வு

கல்வி கடன்களுக்கான டி.சி.எஸ். வரியை ₹10 லட்சம் வரை நீக்குவதற்கான திட்டம் (குறிப்பிட்ட நிதி நிறுவனங்களிலிருந்து)

இனி மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை

தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக

2005: ₹1 லட்சம், 2012: ₹2 லட்சம், 2014: ₹2.5 லட்சம், 2019: ₹5 லட்சம், 2023: ₹7 லட்சம், 2025: ₹12 லட்சம்  என சுட்டிக்காட்டினார்.

ஆண்டு வருமானம் ரூ.24 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்களுக்கு 30% வரிவிதிக்கப்படும் என்றும்,  வரி மாற்றங்களால் நேரடி வரிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படும் என  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்தார்.

புதிய வருமான வரி சட்டம்
வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது. அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் விதமாக புதிய வருமான வரி சட்ட மசோதா இருக்கும். புதிய சட்ட மசோதாவில் பழைய சட்டத்தின் 50% விதிகள் இருக்கும். முதியோருக்கான வட்டி வருவாயில் ₹1 லட்சம் வரை வருமான வரி கிடையாது

புதிய வரி மசோதா புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் வரி செலுத்துவோர்

புதிய வருமான வரி மசோதா தற்போதைய சட்டங்களில் பாதியை வார்த்தைகளில் செயல்படுத்தும்

புதுப்பிக்கப்பட்ட மத்திய KYC பதிவேடு 2025 இல் வெளியிடப்படும்.

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,000 இடங்கள் 

மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு கூடுதலாக 10 ஆயிரம் இடங்களும், அடுத்த ஐந்தாண்டுகளில் 75,000 இடங்களும் சேர்க்கப்படும் என அறிவித்தார்.

2025- 26 நிதி ஆண்டில் நாட்டில் 200 புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்

ஸ்விக்கி, சோமாட்டோ ஊழியர்களுக்கு காப்பீடு வசதி 

“ஸ்விக்கி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். ஸ்விக்கி, சோமாட்டோ ஊழியர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படும்.

*Gig Workers என அழைக்கப்படும் உணவு டெலிவரி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள்
இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஸ்விக்கி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்கள் 1 கோடி பேர் பயன்பெறுவர்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 100% ஆக உயர்த்தப்படும்

ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்

அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்

உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்

ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு

120 புதிய இடங்களுக்கு உள்ளூர் விமான இணைப்பை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட UDAAN திட்டம் தொடங்கப்படும்; அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி கூடுதல் பயணிகளை உருவாக்கத் திட்டம்

பீகாருக்கு 3 புதிய விமான நிலையங்களள் அமைக்கப்படும் என்றும்,   52 சுற்றுலாத் தலங்கள் மாநில அரசின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை மறுஆய்வு செய்ய உயர் மட்டக் குழு அமைக்கப்படும்.

வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க தனி அமைப்பு உருவாக்கப்படும்

சர்வதேச வர்த்தகத்திற்கான பாரத் டிரேட்நெட் அமைக்கப்படும். நகரங்களை சிறப்பான மையங்களாக மாற்றக்கூடிய வகையில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசு திட்டத்தை தொடங்க உள்ளது

அணுஉலைகள் மூலம் 2047- ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு

ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது ஒன்றிய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது

“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி.” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

மாணவர்களுக்கு தாய்மொழியில் டிஜிட்டல் பாடங்கள் வழங்க திட்டம்

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவுபடுத்தப்படும்

பீகாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்

பீகார் மாநிலத்திற்கு என்று பிரத்யேக நீர்ப்பாசன திட்டங்கள்

பாட்னாவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்