சென்னை

மிழ் திரைப்படத் தயாரிபாளர் சங்கம் நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்த கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவது என்றும் . நடிகர் , நடிகைகளின் சம்பளம் குறித்து முடிவெடுக்கும் வரை படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு.

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும்.

நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவதன் மூலம் நடிகர், நடிகைகளின் சம்பளத்தை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை உருவாக்க திட்டம் எடுக்க பட உள்ளது.

ஆகஸ்ட் 16 முதல் புதிய படத்திற்கு பூஜை கிடையாதி

பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கியுள்ளதால் புதிய படத்திற்கு பூஜை போடக்கூடாது

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.