டில்லி,

ந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்றான உத்தரகாண்ட் மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

மாநில முதல்வராக திரிவேந்திரா சிங் ராவ் இருக்கிறார்.  அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்று கூறி உள்ளார்.

மேலும், உத்தரகாண்ட் மாநிலம் தற்போதுள்ள நிதி நெருக்கடியிலும் ஏற்கனவே 45,000 கோடி கடனாக வழங்கி உள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை ரத்து செய்ய முடியாது.

மேலும், குறைந்த வட்டியில் கடன்கள் அளிக்கப்படும் என்றும், 2 சதவிகித வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார்.