சென்னை: தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவதற்கு விலக்கு வழங்கப்படவில்லை, அபராதத்திற்கு மட்டுமே விலக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், மக்கள் முக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

 நாடு முழுவதும் மீண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்தான் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம்.  “முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை திரும்பப் பெறப்படவில்லை. முகக்கவத்திற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயம்தான் என்றார்.

இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டாலும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். . தேவைப்பட்டால் மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசியது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் குழுவினர், அருகில் அரசு மருத்துவமனை இருந்தும் வேண்டுமென்றே தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.