பென் ஸ்டோக்ஸ் போன்று இன்னொருவரா? நோ சான்ஸ்… வானளாவப் புகழும் கவுதம் கம்பீர்..!

Must read


புதுடெல்லி: தற்போதைய நிலையில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்கிற்கு இணையாக உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் கிடையாது என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் பேட்டிங் நட்சத்திரம் கவுதம் கம்பீர்.
அவர் கூறியுள்ளதாவது, “பென் ஸ்டோக்சுடன் ஒப்பிடக்கூடிய வீரர் இந்தியாவில் இப்போதைக்கு இல்லை. ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் தனித்துவமாகத் திகழ்கிறார்.
இந்தியாவில் மட்டுமல்ல, அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று பலவகை கிரிக்கெட்டில் ஆடுவதைப் பார்க்கையில், உலகிலேயே எந்த ஒரு வீரரும் அவருக்கு நெருக்கமாக வரவில்லை.
ஸ்டோக்ஸ் போன்ற ஒருவர், எந்தக் கேப்டனுக்கும் மிகவும் விருப்பமானவர்! மேலும், பென் ஸ்டோக்ஸ் தன்னளவிலேயே ஒரு கேப்டன்தான். கேப்டனாக இருந்தால்தான் கேப்டன் என்று அழைக்கப்பட வேண்டியதில்லை. ஒருவரது ஆட்டத்தின் மூலமே கேப்டன் என்று அழைக்கப்படும் தகுதியைப் பெற்று விடுவார். அதுதான் பென் ஸ்டோக்ஸ்!
எனவே, நிறைய வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் போன்று ஆட வேண்டுமென நினைப்பார்கள். ஆனால், அப்படியான மற்றொரு வீரர், உலக கிரிக்கெட்டில் இப்போதைக்கு யாரும் இல்லை” என்று எக்கச்சக்கமாகப் புகழ்ந்துள்ளார் கவுதம் கம்பீர்.
 

More articles

Latest article